துறைநீலாவணை மகா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப்போட்டி -கம்பர் இல்லம் சாம்பியனானது

பட்டிருப்பு கல்வி வலயத்திற்கு உட்பட்ட மட்/பட்/துறைநீலாவணை மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி பாடசாலை அதிபர் திரு.தி.ஈஸ்வரன் தலைமையில் 11/05/2023 (வியாழன்) அன்று பி.ப 2 மணியளவில் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பட்டிருப்பு வலயக் கல்வி பணிப்பாளர் திரு.எஸ்.சிறிதரன் அவர்களும் விசேட சிறப்பு அதிதியாக கிழக்கு மாகாண முன்னாள் மாகாணப் கல்விப் பணிப்பாளர் திருமதி.நகுலேஸ்வரி புள்ளநாயகம் அம்மணி அவர்களும் விசேட அதிதிகள், கெளரவ அதிதிகள், ஆன்மீக அதிதிகள், விசேட சிறப்பு அதிதிகள், பாடசாலை பிரதி அதிபர் மற்றும் ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

துறைநீலாவணை அனைத்து விளையாட்டுக் கழகங்களின் ஒத்துழைப்போடு நடைபெற்ற இப்போட்டியில் கம்பர் இல்லம், வள்ளுவர் இல்லம் மற்றும் இளங்கோ இல்லத்தை சேர்ந்த மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

கல்வி அபிவிருத்தியில் கற்றல் செயற்பாடுகளுக்கு அப்பால் மாணவர்கள் போட்டியாளர்களாகவும் புரிந்துணர்வு மற்றும் விட்டுக்கொடுப்புகள் உள்ளவர்களாகவும், நற்புறவோடு பழகி நற்பிரஜைகளாக உருவாக இந்நிகழ்வுகள் வழி செய்யும் என்பதற்கமைய பாடசாலை மாணவர்கள் சிறந்த முறையில் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நடைபெற்று முடிந்த போட்டிகளின் அடிப்படையில் ஒவ்வொரு இல்லமும் பெற்றுக்கொண்ட புள்ளிகளுக்கு அமைய மூன்றாம் இடத்தை வள்ளுவர் இல்லமும், இரண்டாம் இடத்தை இளங்கோ இல்லமும் பெற்றுக்கொண்டதோடு; முதலாம் இடத்தை கம்பர் இல்லம் பெற்றுக்கொண்டு சம்பியனானது.

இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் கேடயங்களை நிகழ்வில் கலந்துகொண்ட பிரதம அதிதி, விசேட சிறப்பு அதிதி, சிறப்பு அதிதிகள், ஆன்மீக அதிதிகள், கெளரவ அதிதிகள் என பலரும் வழங்கி வைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.