நாட்டில் எந்தவொரு மின் தடையும் ஏற்படாது என மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.

தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் பதிவிலே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நிலக்கரி தட்டுப்பாடு

நாட்டில் ஏற்பட்டுள்ள நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின்சார தடை ஏற்படுமென கடந்த காலங்களில் இலங்கை மின்சார சபை தெரிவித்திருந்த நிலையில் அவ்வாறான எந்தவொரு மின் தடையும் ஏற்படாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையம்

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் மூன்றாவது கட்டமைப்பை 100 நாட்களுக்கு செயலிழக்கச் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் ஜூன் மாதம் மூன்றாம் திகதி முதல் 100 நாட்களுக்கு இந்த கட்டமைப்பு செயலிழக்க செய்யப்படவுள்ளதாக குறித்து கட்டமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வதற்காகவே இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நிலக்கரி தேவை

இந்த காலப்பகுதியில் நாட்டில் மின்சார தடையை ஏற்படுத்தாது முகாமைத்துவப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது 30வது சரக்கு நிலக்கரி நுரைச்சோலையில் இறக்கப்படும் நிலையில், இப் பருவத்திற்கான மின்சார சபையின் முழு நிலக்கரித் தேவையும் பூர்த்தியாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.