பஹாமாஸ் நாட்டுக்கு சொந்தமான போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கைக்குள் பிரவேசிக்க முயன்ற நைஜீரிய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நைஜீரியாவில் இருந்து லைபீரியாவுக்கும், பின்னர் மொராக்கோவுக்கும் அவர் வந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் அவர் கட்டார் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான QR 654 என்ற விமானம் மூலம் இலங்கை வந்தடைந்த அவர் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கடவுச்சீட்டை சரிபார்த்த விமான நிலைய குடிவரவு அதிகாரிகள் அவரை மீண்டும் நாடு கடத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.