நீர்கொழும்பு கொச்சிக்கடை பகுதியில் வைத்து சஹாரான் ஹாசிமின் மனைவியின் சகோதரனை கைது செய்ததாக கொச்சிக்கடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் தாக்குதலுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் 2019 ஆம் ஆண்டு முதல் விளக்கமறியலில் வைக்கப்பட்டு 2022 செப்டெம்பர் 23 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

சந்தேக நபரும் அவரது மனைவியும் அவரது பெற்றோரின் வீட்டிற்கு வந்தபோது, ​​புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட தம்பதியினர் நீர்கொழும்பு பதில் நீதவான் நெல்சன் குமாரநாயக்க முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டு மே 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.