இலங்கையின் பொருளாதாரம் வொஷிங்டனிலிருந்து கட்டுப்படுத்தப்படுவதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கப்ராலுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒன்றிற்காக நீதிமன்றில் முன்னிலையாகி திரும்பிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நிபந்தனைகளை நிறைவேற்றுவது மிகவும் கடினமானது

சர்வதேச நாணய நிதியத்தினால் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை நிறைவெற்றுவது மிகவும் கடினமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை நிறைவேற்றுவது மிகவும் கடினமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிபந்தனைகளை மாற்ற முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஆட்சியாளர்களிடமோ தம்மிடமோ இது பற்றி கேட்க வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் பற்றிய கேள்விகள் வொஷிங்டனிடமே கேட்க வேண்டுமெனவும் அங்கிருந்தே இலங்கையின் பொருளாதாரம் கட்டுப்படுத்தப்படுகின்றது எனவும் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.