மார்ச் மாதத்தில் சந்தையில் சமையல் எரிவாயுவின் விலை குறைவடைந்தாலும் ரூபாவின் பெறுமதி பலமடைந்து டொலருக்காக வழங்க வேண்டிய ரூபாவின் பெறுமதி குறைவடைந்ததை உள்ளிட்ட காரணங்களின் பிரதிபலனாக சமையல் எரிவாயு சிலிண்டரொன்றின் விலையை 1000 ரூபாவிற்கு அதிகமாக குறைப்பதற்கு முடிந்துள்ளதாகவும் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன் சர்வதேச நாணய நிதியத்தின் கைச்சாத்திடப்பட்டுள்ள உடன்படிக்கையில் செலவுகளை கட்டுப்படுத்தும் விதம், விலைக்கொள்கைகள், மின்சாரம், எரிவாயு, எரிபொருள் ஆகியவை தொடர்பில் பின்பற்ற வேண்டியவை சம்பந்தமாக அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.