பிரதமர் செயலகத்தில் மின்சார கட்டணத்தை செலுத்தாத காரணத்தினால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு 07 மல் வீதியில் அமைந்துள்ள பிரதமர் செயலகத்திலேயே மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

6 லட்சம் ரூபாய் மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாமையால் மின் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகத்தின் பேச்சாளர் ஒருவர் ஊடகமொன்றிற்கு தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, நேற்று பிற்பகல் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் உயர் அதிகாரிகளுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Warning: Undefined variable $post in /home/kalmowix/public_html/wp-content/themes/newsup/inc/ansar/hooks/hook-index-main.php on line 117