பிரபல வர்த்தகர் தினேஷ் சாப்டர் படுகொலை விவகாரத்தில் இதுவரையிலான விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள விடயங்களின் அடிப்படையில் சந்தேகத்தை தோற்றுவித்துள்ள நபர் ஒருவரை சி.ஐ.டி சிறப்புக் குழுவொன்று 24 மணிநேரமும் கண்காணித்து வருகிறது.

குறித்த நபர் தொடர்பில் இதுவரையில் உறுதியான சாட்சியம் ஒன்று விசாரணையாளர்களுக்கு கிடைக்காத நிலையிலேயே அவரைக் கைது செய்யாது பல கோணங்களில் சிறப்பு விசாரணைகள் இடம்பெறுவதாக விசாரணையாளர்கள் தெரிவித்தனர்.

தினேஷ் சாப்டர் கொலை செய்யப்பட முன்னர், கொலை செய்யப்பட்ட பின்னர் குறித்த நபரின் நடவடிக்கைகள் தொடர்பில் சிறப்பு குழுவொன்று பூரணமாக பரிசீலித்து வருவதாகவும், அவரது தொலைபேசி அழைப்புக்கள் உள்ளிட்டவற்றையும் அக்குழு ஆராய்ந்து வருவதாகவும் அறிய முடிகிறது.