சாய்ந்தமருது கலாசார மத்திய நிலைய முகாமைத்துவ சபையின் செயலாளராக அஸ்வான் மௌலானா தெரிவு

(செயிட் ஆஷிப்)

சாய்ந்தமருது கலாசார மத்திய நிலைய முகாமைத்துவ சபையின் செயலாளராக கலைஞர் அஸ்வான் ஷக்காப் மௌலானா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆஷிக் முன்னிலையில் கலாசார உத்தியோகத்தரும் மேற்படி மத்திய நிலையத்தின் பொறுப்பதிகாரியுமான யூ.கே.எம்.றிம்ஸான் தலைமையில் இடம்பெற்ற முகாமைத்துவ சபையினரின் ஒன்றுகூடல் மற்றும் நிர்வாகத் தெரிவின்போதே அவர் இப்பதவிக்கு ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.

மருதம் கலைக்கூடல் மன்றத்தின் ஸ்தாபகத் தலைவராகவும் சாய்ந்தமருது பிரதேச செயலக கலாசார அதிகார சபையின் பொருளாளராகவும் பணியாற்றி வருகின்ற அஸ்வான் மௌலானா, நாடகக் கலை பட்டறைக்கான வளவாளராகவும் அண்மையில் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

நாடக எழுத்தாக்கம், தயாரிப்பு மற்றும் மேடை நாடகம் என்பவற்றில் விற்பன்னராகத் திகழும் இவர் பல்வேறு விருதுகளை பெற்றிருப்பதுடன் தொலைக்காட்சி நாடகங்களிலும் நடித்திருக்கிறார்.

கலை, கலாசார மற்றும் சிவில் சமூக செயற்பாடுகளில் முன்னின்று பங்காற்றி வருகின்ற இவர் முஸ்லிம் சமய, கலாசார அமைச்சின் இணைப்புச் செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Warning: Undefined variable $post in /home/kalmowix/public_html/wp-content/themes/newsup/inc/ansar/hooks/hook-index-main.php on line 117