காலநிலை -மக்களுக்கான அறிவித்தல்

வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, ‘மாண்டஸ்’ புயலாக வலுப்பெற்றது. சென்னை, தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக (இன்று) புயலாக வலுப்பெறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயலை தொடர்ந்து தமிழகம் மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இலங்கையில் வடமாகணத்தில் கடுமையான காற்றுடன் மழை பெய்யக் கூடிய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் கரையோரங்களில் கடுமையான காற்றும் மழையும் காணப்படும் எனவும் மக்கள் அவதானமாக இருகுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.