ராஜபக்ஷ குடும்பம் ஆணவத்துடன் நாட்டை ஆட்சி செய்ததன் காரணமாகவே இந்த நாடு அழிந்தது எனவும், எனவே அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ராஜபக்ஷர்கள் மக்கள் எங்கு சென்றாலும், மக்கள் போராட்டம் நடத்தி விரட்டியடிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், ரணில்-சந்திரிகா மற்றும் வெல்கம ஆகியோர் இணைந்து தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தை அகற்றுவதற்கான சதியை ஆரம்பித்துள்ளதாகவும் தயாசிறி ஜயசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

You missed