பல்வேறு காரணங்களை முன்வைத்து உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் தயாராகுமானால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் (PAFFREL) தெரிவித்துள்ளது.

எதிர்வரும் செவ்வாய்க் கிழமை தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் நிலைமை குறித்து கலந்துரையாடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.