ஐக்கிய ராஜ்ஜியத்தில் அமைந்துள்ள மட்டக்களப்பு நலிவுற்றோர் அபிவிருத்தி சங்கம் (BUDS-UK) மற்றும் மட்டக்களப்பு மருத்துவமனைகளின் நண்பர்கள் சங்கம் (FOBH-UK) என்பவற்றின் நிதிப்பங்களிப்பில் கர்ப்பினிப் பெண்கள் மற்றும் 5 வயதுக்குட்பட்ட ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு “நவபோச” சத்துமா வழங்கும் நிகழ்வு இன்று (04.11.2022) வெள்ளிக்கிழமை நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இன் நிகழ்வில் சுகாதார வைத்திய அதிகாரி ந.ரமேஸ், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை உதவி வைத்திய அத்தியட்சகர் ஜெ.மதன், பிராந்திய பற்சிகிச்சை வைத்திய அதிகாரி சருக், கல்முனை வடக்கு வைத்தியசாலை நிர்வாக உத்தியோகத்தர் தோ.தேவஅருள் மற்றும் சுகாதார வைத்திய அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டதோடு இந் நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச தாய்மார்களுக்கான சத்துமா பொதிகள் வழங்கி வைத்தனர்

சுகாதார வைத்திய அதிகாரி ந.ரமேஸ் உரையாற்றுகையில் இவ் உதவியை வழங்கிய அமைப்பிற்கு நன்றி தெரிவித்ததோடு வரும் காலங்களிலும் இந்த அமைப்பு பல உதவிகளை வழங்க முன்வந்துள்ளதாக குறிப்பிட்டார்.