கிழக்குமாகாண மட்ட பாடசாலை 2022, விளையாட்டு விழாவில் கிழக்கு மாகாணமட்ட உதைபந்தாட்ட போட்டியில் முதலாம் இடத்தினைப் பெற்று மட்/மமே/அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலயம் சாதனை படைத்துள்ளது.

பெண்களுக்கான உதைபந்தாட்டப்போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு மேற்கு வலய பாடசாலையாக உள்ள அம்பிளாந்துறை கலைமகள் வித்தியாலயம் மாணவிகள் முதலாம் இடத்தை பெற்று சாதனை படைத்தமை தொடர்பாக வித்தியாலய அதிபர் க.அரசரெத்தினம் கருத்து கூறுகையில் எமது பாடசாலை மாணவிகளின் திறமையை இட்டு மிகவும் பூரிப்பு அடையும் இவ்வேளையில் அவர்களை வழிப்படுத்திய ஆசிரியர்கள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் அனைவரையும் எமது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என மேலும் தெரிவித்தார்.