முன்னாள் ஜனாதிபதி கோத்தாவை கைது செய்ய வேண்டும் – பரவலாக கோரிக்கை

இலங்கைத் திருநாடு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டதற்கு முக்கிய காரணமாக மக்களால் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சேவை நீதியின் முன் நிறுத்தி சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்கின்ற கோரிக்கை பல அமைப்புகளாலும், பல்வேறு தலைவர்களாலும் பரவலாக முன்வைக்கப்பட்டு வருகிறன.

இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டதும் இலங்கை மக்களின் மாபெரும் எதிர்ப்பை எதிர்கொண்ட முன்னாள் ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேறியிருந்தார்.

இவர் தஞ்சம் புகுவதற்கு சில நாடுகளிடம் கோரிக்கை முன்வைத்த போதும் அது நிராகரிக்கப்பட்ட நிலையில் தாய்லாந்து, சிங்கப்பூர், மாலைதீவு ஆகிய நாடுகளில் குறுகிய காலங்கள் மாறி மாறி தங்கி இருந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் நாட்டை வந்தடைந்திருந்தார்.
இவர் நாட்டை விட்டு வெளியேறி சிங்கப்பூரில் இருந்தவாரே தனது ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்