வளத்தாப்பிட்டி ஸ்ரீ பத்திரகாளியம்பாள் ஆலய உற்சவம் சிறப்பாக இடம் பெறுகிறது : எதிர்வரும் சனிக்கிழமை தீமிதிப்பு!

-காந்தன்-

கிழக்கிழங்கை வளத்தாப்பிட்டி கிராமத்தில் பண்நெடும் காலமாக அருள்பாளித்துக் கொண்டிருக்கும் அகில லோகநாயகி அகிலாண்டேஸ்வரி ஸ்ரீ பத்ரகாளி அம்பாள் ஆலய உற்சவம் கடந்த 02 -09- 2022 வெள்ளிக்கிழமை திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகியது.

தொடர்ச்சியாக தொடர்ச்சியாக 7 தினங்கள் அன்னையினுடைய வருடாந்த சடங்கு நிகழ்வுகள் இடம் பெற்று எட்டாம் நாளாகிய 10-09_ 2022 சனிக்கிழமை காலை 7 மணியளவில் தீ மிதிப்பு வைபவத்துடன் உற்சவம் நிறைவு பெற இருக்கின்றது.

முதலாவது நாளாகிய 03- 9- 2002 பால்குட பவானியானது வளத்தாப்பட்டி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய ஆலயத்தில் இருந்து நடைபவணியாக அதிகளவான பக்தர்கள் கலந்துகொண்டு அம்பாளுக்கு பால் அபிஷேகம் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து 4_9 2022 அன்னை சிங்க வாகனத்தில் ஆலய உள்வீதி வலம் வருதலும் அதனைத் தொடர்ந்து. நான்காவது திருச்சடங்கு ஆகிய 6 9_ 2022 அன்னை ஆலயவெளிவீதி உலா வருதல் போன்ற நிகழ்வுகளும் அதனைத் தொடர்ந்து 07_09_ 2022 அன்னை எழுந்தருளி கிராமிய வலம் என்று சொல்லப்படுகின்ற நகர்வலம் இடம்பெற இருக்கின்றது.

எதிர் வருகின்ற 10 09 2022 சனிக்கிழமை காலை அன்னையினுடைய தீ மிதிப்பு உசற்சபமும் இடம்பெற இருக்கின்றது அன்னையின் நிகழ்வுகளை தலைமை பூசகராக (மாரியின் மைந்தன் சக்தி உபாசகர் திரு.மு. ஜெகநாதன் அவர்களுடைய தலைமையிலே இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.