பாறுக் ஷிஹான்

அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை சம்மாந்துறை நாவிதன்வெளி கல்முனை சாய்ந்தமருது காரைதீவு நிந்தவூர் பிரதேச செயலக பிரிவில் மீண்டும் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்துள்ளதாகவும் இதனை தடுப்பதுக்கு நடவடிக்கை எடுக்குமாறும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கல்முனை சாய்ந்தமருது காரைதீவு நிந்தவூர் நாவிதன்வெளி நற்பிட்டிமுனை அஸ்ரப் நகர் ஆகிய பகுதிகளில் காட்டு யானைகளின் மீண்டும் தொல்லை அதிகளவில் காணப்படுகின்றது.

காட்டு யானைகளின் தொல்லையால் குறித்த கிராமங்களில் மக்கள் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளனர்.

மாலை மற்றும் இரவு வேளைகளில் கிராமங்களுக்குள் உட்புகும் யானைகளினால் குடியிருப்பு பகுதி மற்றும் சிறுபோக நெற்செய்கை நிலங்கள் பெருமளவான பயன்தரும் மரங்களையும் பயிர்களையும் அழித்து வருகின்றனர.

இந்தப் பகுதிகளில் காட்டு யானைகளைக் கட்டுப்படுத்த கடந்த காலங்களில் யானை வெடிகளை வனஜீவராசி திணைக்களம் பொதுமக்களுக்கு வழங்கி இருந்தது.

எனினும் யானைகளின் அச்சுறுத்தல் தொடர்ந்த வண்ணமே உள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன் யானைகளைக் கட்டுப்படுத்துவதுக்கு மாற்று வழியை ஏற்படுத்தித்தருமாறு மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.