சர்வதேச நாணய நிதியத்தின் கடன்களை வழங்குவதற்கு, இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கடன் வழங்குனர்களிடமிருந்து பெறப்பட்ட சான்றிதழ் தேவை என சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. இலங்கையின் கடன் நிலையற்றதென மதிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் நீண்ட கால நிதி வசதிகளுக்கான சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் அனுமதிக்கு, கடன் நிலைத்தன்மை மீளமைக்கப்படும் என இலங்கையின் கடன் வழங்குனர்களிடமிருந்து போதுமான உத்தரவாதம் தேவை என சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.

புதிய கோரிக்கை

இலங்கை அதிகாரிகளுடன் பொருளாதார மற்றும் நிதி சீர்திருத்தங்கள் மற்றும் கொள்கைகள் குறித்து விவாதிக்க சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் எதிர்வரும் 24-31 ஆம் திகதிக்கு இடையில் நாட்டிற்கு வருகை தர உள்ளனர்.

இந்த விஜயத்தின் போது சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் மற்ற பங்குதாரர்களுடன் தொடர்ந்து பணியாற்றுவார்கள் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You missed