ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர் பதவிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் மாற்றப்பட்டுள்ளன.

அதற்கமைய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.என்.ஜமால்டீன் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளராகவும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் W.P.D. சில்வா பிரதமரின் பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவிற்கு பொறுப்பாக இருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் K.P.D. ஜயலத், அமைச்சர் பாதுகாப்பு பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் மாற்றம்

ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.என்.ஜமால்டீன் இதற்கு முன்னர் பிரதமர் பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பாளராக கடமையாற்றியிருந்தார்.

பிரதமரின் பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் W.P.D. சில்வா இதற்கு முன்னர் கடற்படைப் பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றியிருந்தார்.

பிரதமர் பாதுகாப்பு பிரிவில் மாற்றம்

அமைச்சர் பாதுகாப்புப் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.பி.டி.ஜயலத், முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்குப் பொறுப்பான ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளராக செயற்பட்டுள்ளார்.

அதற்கமைய, 08 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் ஒரு உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.