வரிசையின்றிய விநியோகம் 

எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் மக்கள் வரிசையில் நிற்காமல் எரிவாயுவை தட்டுப்பாடு இன்றி பெற்றுக்கொள்ள முடியும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று (26) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.