ஜனாதிபதி மாளிகைக்குள் புகுந்து ஆர்ப்பாட்டக்காரர்களால் சேதமாக்கப்பட்ட மேல் தளத்திற்கு செல்லும் படிகளை புனரமைக்க பத்து கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும் என தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தற்போது, ​​மேல் மாடிக்கு செல்லும் தொல்லியல் மதிப்புள்ள படிக்கட்டு சேதமடைந்துள்ளதால், அதனை புதிதாக சீரமைக்க வேண்டும் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ஜனாதிபதி மாளிகையில் பாதிப்பு

இந்த படிகள் தொல்லியல் துறை அதிகாரிகளின் மேற்பார்வையில் புனரமைக்கப்பட உள்ளது.

இங்குள்ள தொல்லியல் பெறுமதிமிக்க ஏனைய சொத்துக்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை கணக்கிட முடியாத நிலையே உள்ளது என அதிகாரிகள் அரசாங்கத்திடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.


Warning: Undefined variable $post in /home/kalmowix/public_html/wp-content/themes/newsup/inc/ansar/hooks/hook-index-main.php on line 117