கிரான்குளம் மகாவிஷ்ணு ஆலயத்தின் மகா கும்பாபிஷேக நிகழ்வுகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை சிறப்பாக நடைபெறவுள்ளன.

இதன்படி, கருமாரம்பம் செப்டம்பர் 7ஆம் திகதியும், எண்ணெய்க்காப்பு செப்டம்பர் 8ஆம் திகதியும் நடைபெறவுள்ளதுடன், ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் செப்டம்பர் 9ஆம் திகதி வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு, மகாவிஷ்ணு பெருமானின் திருவருளைப் பெற்றுச் செல்லுமாறு ஆலய நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

அனைவரும் வருக! மகாவிஷ்ணு பெருமானின் திருவருள் பெறுக!