இன்று பேச்சியம்மனுக்கு  இ.கி.மிஷனின் பாரம்பரிய சீர்

(வி.ரி. சகாதேவராஜா)

மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் சார்பாக பாரம்பரிய சீர் கொண்டு செல்லும் நிகழ்வு,கல்லடி ஸ்ரீ பேச்சியம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவத்தின் கதவு திறத்தல் வைபவ தினமான இன்று (10) திங்கட்கிழமை அதிகாலை,  சிறப்பாக நடைபெற்றது.

மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் ஆச்சிரம முதல்வர் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ தலைமையில் இன்று அதிகாலை 3.55 மணிக்குசீர் கொண்டு செல்லும் நிகழ்வு நடைபெற்றது.

மிஷனரிலிருந்து சுவாமிகள் தலைமையில் பக்தர்கள் ஊர்வலமாக ஆலயத்திற்கு சென்று  சீர் வரிசைகளை கையளித்தனர்.