உந்தை முருகன் ஆலயத்திலிருந்து கதிர்காமம் நோக்கி பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்காக, நற்பிட்டிமுனை வேலன் தொண்டர்படை அமைப்பின் ஏற்பாட்டில் ஜூலை 13 மற்றும் 14 ஆகிய தினங்களில் காலை மற்றும் மதிய அன்னதானப் பணி சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.
நற்பிட்டிமுனை மக்களின் தாராள நிதிப் பங்களிப்பும், தன்னார்வ ஒத்துழைப்பும் இணைந்ததன் மூலம் இந்த அறப்பணி வெற்றிகரமாக நடைபெற்றது. பாதயாத்திரையில் ஈடுபட்டிருந்த ஏராளமான பக்தர்கள் இந்த அன்னதானச் சேவையின் மூலம் பயனடைந்தனர்.
இந்த மனிதநேய மற்றும் ஆன்மிகச் சேவைக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒத்துழைப்பு வழங்கிய நற்பிட்டிமுனை மக்களுக்கும், நன்கொடையாளர்களுக்கும், தன்னார்வத் தொண்டர்களுக்கும் நற்பிட்டிமுனை வேலன் தொண்டர்படை அமைப்பினர் தமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளனர்.
பக்தர்களின் நலனையும், சேவை மனப்பான்மையையும் முன்னிறுத்தி ஆண்டுதோறும் இவ்வாறான அறப்பணிகளை தொடர்ந்தும் முன்னெடுக்க உறுதியுடன் செயல்பட்டு வருவதாகவும் அமைப்பினர் தெரிவித்தனர்.




