குவைத் சர்வதேச விமான நிலையத்தின் பிரதான முனையப் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 63 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது இதில் இலங்கையைச் சேர்ந்த மூவர் காயமடைந்துள்ளதாக குவைத்திற்கான இலங்கைத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.

தாக்குதல் இடம்பெற்ற வேளையில் குறித்த இலங்கையர்கள் விமான நிலையத்தில் பராமரிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்ததாக குவைத்திற்கான இலங்கைத் தூதுவர் லக்ஷித ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

காயமடைந்த இலங்கையர்களை தூதுவர் லக்ஷித ரத்நாயக்க உள்ளிட்ட இலங்கைத் தூதரக அதிகாரிகள் மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டு அவர்களின் உடல்நிலை குறித்து விசாரித்துள்ளனர்.

இதனிடையே, குவைத் விமான நிலையம் மீதான இந்தத் தாக்குதல் தொடர்பில் ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.