ஒரு மாணவன் ஒரு மரம், ஒரு மரம் ஒரு எதிர்காலம்” என்ற தலைப்பில் சுற்றாடல் வார நிகழ்வு
சுற்றாடல் வாரத்தை முன்னிட்டு, கல்முனை பிராந்தியத்தில் தெரிவு செய்யப்பட்ட மூன்று பாடசாலைகளான கமு / உவெஸ்லி உயர்தர பாடசாலை கமு /பாண்டிருப்பு மகாவித்தியாலயம் மற்றும் கமு /ஸ்ரீ மாமாங்க வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் மரநடுகை நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வு, கல்முனை சிங்கர் பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் மற்றும் அதன் கிழக்கு பிராந்திய முகாமையாளர் M.W வீரகுமார் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களிடையே மரநடுகையின் முக்கியத்துவம், சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம் மற்றும் பசுமையான சூழலை உருவாக்குவதன் பெறுமதி ஆகியவற்றை எடுத்துரைப்பதே இந்நிகழ்வின் பிரதானநோக்கமாகும்.
இவ் நிகழ்வின் போது பாடசாலை அதிபர்களான திரு.எஸ்.கலையரசன், திரு அருண்குமார், திரு புவனேஸ்வரன் மற்றும் நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் மரநடுகை சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.
மேலும், மாணவர்கள் நேரடியாக மரக்கன்றுகளை நட்டு அவற்றைப் பராமரிப்பதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தங்களது பங்களிப்பை வழங்கும் வாய்ப்பும் இந்நிகழ்வின் மூலம் ஏற்படுத்தப்பட்டது.
ஒரு மாணவன் ஒரு மரம், ஒரு மரம் ஒரு எதிர்காலம்” என்ற எண்ணத்துடன் அனைவரும் இணைந்து பசுமையான நாளைய உலகை உருவாக்குவோம் என்ற அடிப்படையில் இம்மர படுகை இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.












