(ஷனா)
அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் கணக்காளராக கடமையாற்றிய மருதமுனையை சேர்ந்த கமறுத்தீன் றிஸ்வி யஹ்சர், நாவிதன்வெளி பிரதேச செயலக கணக்காளர் கடமைக்கு மேலதிகமாக உகண பிரதேச செயலகத்தின் கணக்காளராகவும் இன்று (03) கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.
அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் அனுப்பம மங்கள விக்ரமாராச்சி மற்றும் உகண பிரதேச செயலாளர், உதவிப் பிரதேச செயலாளர், நிர்வாக அதிகாரிகள் முன்னிலையில் தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார். றிஸ்வி யஹ்சர், 2000 ஆம் ஆண்டு இலங்கை கணக்காளர் சேவையில் இணைந்து கொண்டதன் பின்னர் மகோயா பிரதேச செயலகம், மகோயா வலயக் கல்வி அலுவலகம், பதியத்தலாவ பிரதேச செயலகம், அக்கரைப்பற்று மாநகர சபை, கல்முனை வலயக் கல்வி அலுவலகம் ஆகியவற்றில் இதற்கு முன்னர்
கணக்காளராக கடமையாற்றியுள்ளார். இறுதியாக நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் கணக்காளராக கடமை ஆற்றும் நிலையிலயே தற்போது இப்பணிக்கு மேலதிகமாக உகன பிரதேச செயலகத்தில் கணக்காளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
றிஸ்வி யஹ்சர், மருதமுனையை சேர்ந்த கமறுத்தீன் – நஜ்முன்னிசா ஆகியோரின் இரண்டாவது புதல்வர் என்பதுடன் இவர் மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியின் பழைய மாணவரும் ஆவார்.
