பல நூற்றாண்டு வரலாற்றைக் கடந்து அருள் மழை பொழிகின்ற கல்முனை ஆதார வைத்தியசாலையின் சித்தி விநாயகப் பெருமானின் ஆலயம், வரலாற்றுப் புகழுக்கு ஏற்ப பொலிவற்றுள்ளதாலும், கும்பாபிஷேகத்தை நடத்தி முடிக்க வேண்டியதனாலும் திருத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
வைத்தியசாலைக்கு வரும் இந்துக்கள் அனைவரும் வீடு செல்லுமுன் விநாயப் பெருமானை வழிபட்டுத்தான் விடை பெறுகின்றனர்.
எந்த ஒரு துணையும் இன்றி வாழ்கின்ற இப்பிரதேச இந்து மக்கள், உங்களைப் போன்ற பேருள்ளம் கொண்ட அடியவர்களை மட்டும் நம்பியே இப்பிரதேசத்தை இன்னும் தக்க வைத்துக் கொண்டுள்ளார்கள் என்பதை அறிவீர்கள்.
இந்த சித்தி விநாயகர் ஆலயம் ஒவ்வொரு தலைமுறையினராலும் தங்களால் இயன்ற பணியினை செய்து சிறப்பாக வழி நடத்தி வந்துள்ள வேளையிலும்,
நாளை என்ன நடக்குமோ என்ற இப்பிரதேச மக்களின் தலைவிதியை உணர்ந்து,
எமது அடுத்த தலை முறையினருக்கும் இவ் ஆலயத்தை திருத்தி சிறப்பான நிலையில் கையளிக்க வேண்டிய பாரிய பொறுப்பில் நாங்களும், நீங்களும் உள்ளோம்.
எனவே எதிர்காலத்தில் ஏற்படவுள்ள பேராபத்துக்களை எதிர்கொள்ள, இவ்வாலயத்தை மிகச் சிறப்பாக கட்டி முடிக்க வேண்டிய நிலையில் இன்று நாம் உள்ளோம்.
ஆலயத்தை கட்டி முடிக்கும் பணியில் தாங்களும் தங்களின் அணியினரும் இணைந்து எமது கரங்களை வலுப்படுத்துமாறும், வரலாற்று புகழ் பெற்ற சித்தி விநாயகப் பெருமானின் அருள் அனைவருக்கும் கிடைக்கவும், விநாயகப் பெருமானின் மனம் மிளிர வைக்கவும் உங்களின் மனமுவந்த அன்பளிப்பை வேண்டி நிற்கின்றோம்.
தொடர்புகளுக்கு
வைத்திய கலாநிதி குணசிங்கம் சுகுணன் பணிப்பாளர்( தலைவர்)
ப. செல்வகுமார் (தா/உ) செயலாளர்
0741346767
திருமதி ஜெயசாந்தி சோழவேந்தன்
(தா/உ) பொருளாளர்
077 581 2807
மேலதிக தொடர்புகளுக்கு
பரமலிங்கம் சந்திரமோகன் (மருந்து கலவையாளர்)
நிருவாக சபை
0759617482
Sri sithy Vinayaga resto society
Account no:0006104988
Bank of Ceylon
Kalmunai branch






