பாறுக் ஷிஹான்
தமிழர்களின் வலி நிறைந்த மே18 இன அழிப்பு நினைவுகளை உணர்வுடன் அனுஷ்டிக்கும் வகையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் இன்று (18) கல்முனை மாநகரத்திற்கு உட்பட்ட பாண்டிருப்பு பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
முள்ளிவாய்க்காலில் பரிதாபமாக கொல்லப்பட்ட மக்களை நினைவுகூறும் நோக்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டதுடன் உயிர்நீத்தோருக்கான அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் துஷானந்தன் தலைமையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் மற்றும் பல பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற அழிப்பின் போது மிஞ்சிய தமிழர்களின் உயிர்களை காப்பதற்காக அரிசி மற்றும் நீரை ஊற்றி கஞ்சியாக வடித்து அங்குள்ள கர்ப்பிணி தாய்மார்கள் குழந்தைகளை முதியோர் என் பல இட்சம் உயிர்களை காப்பாற்றுவதற்கு வழங்கப்பட்ட இந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.























