செல்லையா பேரின்பராசா
சமீபத்தில் காலம் சென்ற கிழக்கின் ஊடக முதுசொம் ஏ.எல்.எம். சலீம் அவர்களுக்கான நினைவஞ்சலியும் , அவர் பற்றிய நினைவு மலர் வெளியீடும் ,நினைவுப் பேருரைகளும் இடம் பெற்றது .
சிரேஷ்ட ஊடகவியலாளரும், சலீமின் சிஷ்யனுமான, ஓய்வுநிலை அதிபர் செல்லையா பேரின்பராசாவின் தொடக்கவுரையியில் ஆரம்பமான இந் நிகழ்வில் அரசியல்வாதிகள் பேராசிரியர்கள் சிரேஷ்ட ஊடகவியலாளர் நினைவுப் பேருரைகளை நிகழ்த்தினர்.
இந் நிகழ்வு தலைநகர் கொழும்புபின் தமிழ்ச் சங்கத்தில் – தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்ல் சனிக்கிழமை 16.05.2026 கொழும்பில் இடம்பெற்றது.
அவர் பற்றிய மலர் நுால் அவரது நினைவு கூட்டத்திற்கு வருகை தந்த சகலருக்கும் இலவசமாகவே பகிர்ந்தளிக்கப்பட்டது.
அந்நூலில் பேராசிரியர்கள் அவருடன பழகிய சேவையாற்றிய சிரேஷ்ட தமிழ் முஸ்லிம் ஊடகவியலாளர் என 37 பேர்கள் அவர் பற்றி எழுதிய ஊடகப் பயணத்தினை எழுதியுள்ளார்கள். அந் நுால். 160 பக்கங்கள் கொண்டது. அட்டைப்ப்டத்தில் அவரது முழு அரைப்படமும் கிழக்கின் இன,யுத்த வடுக்கள் பற்றிய அட்டையைக் கொண்டுள்ளது.
காலம் சென்ற சலீம் தமிழ் – முஸ்லிம்களுக்கு இணைப்பு பாலமாகவும் தேசிய ஐக்கியத்திற்கு உறவுப் பாலமாக விளங்கியுள்ளார் அவர் நல்ல நட்பன்புகளுடன் வாழ்ந்தார் மக்களோடு பழகினார் . தான் ஓர் ஊடகவியலாளர் என்பதை விட ஓர் பத்திரிகை நிருபர் என்ற பதவியினையே அவர் விரும்பினார் அவர் ஒரு செய்தி சேகரிப்பதற்கு அத் தளத்திற்குச் சென்று உண்மையான செய்தியை சேகரித்து அதனை புகைப்படம் எடுத்து அதனை அனுப்பி வைப்பார்… அவர் பல இளைய தலைமுறை ஊடகவியலாளர்களையும் வளர்த்துவிட்டுச் சென்றார்……..யுத்த காலத்தில் அவர் பல்வேறு இன ஐக்கியம் மறைந்த தலைவர் எம்.எச்.எம் அஷ்ரப் தொட்டு பல்வேறு கிழக்கு அரசியல் தலைவர்கள் ஐக்கியமாகவும் நேர்மையாகவும் செயல்பட்டார்.
17 வயதில் தனது நிருபா் தொழிலை ஆரம்பித்துள்ளார்…….அவர் உண்மையில் தனது கழுத்தில் கமராவை தொங்கவிட்டு கையில் குறிப்பேட்டின் பல மைல்கள் பிரயாணம் சென்று உண்மைச் செய்திகளை வெளியிடும் செய்தி வர முன்னர் தேசிய பத்திரிகைகளுக்கு தொலைபேசி எடுத்து இன்று இந்தச் செய்தியை நான் பாக்ஸ் மூலம் அனுப்புகிறேன். அதற்காக செய்தித் தாளில் பக்கம் ஒதுக்கி வையுங்கள் என முன்கூட்டியே பத்திரிகை ஆசிரியர்களுக்கு அறிவித்துவிடுவார்………… அவர் என்றும் அவர் சலிம் நிருபர் என்று சொல்வதையே அவர் விரும்பினார்.
அவர் பற்றிய நூல் இரா துரைரத்தினம் தொகுத்து வழங்கி தலைமையில் நினைவுக் கூட்டம் நடைபெற்றது. மேடையில் வீற்றிருந்த சகலருக்கும் நூலின் பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
பேரின்பராஜா அவர் நினைவுகளை அடிக்கடி உச்சரித்து தொகுத்து வழங்கினார்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் அடுத்த ஊடக விருது வழங்கும் போது சலிம் பெயரில் வழங்குவதற்கு ரவுப் ஹக்கீம் அனுசரனை வழங்குவதாக ஒப்புதல் அளித்தார்
மனோ கணேசன், இரா சாணக்கியன் (பா.உ) வீரகேசரி ஆசிரியர் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் ஸ்ரீகஜன் , முன்னாள் தினக்குரல் ஆசிரியர் வீ.தனபாலசிங்கம், இதழியல் கல்லுாரியின் விரிவுரையாளர் தேவ கௌரி, விடிவெள்ளி ஆசிரியர் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் எம்.பி.எம். பைருஸ், ஊடகவியலாளர் நிக்சன், சிலோன் டுடே முன்னாள் ஆசிரியர் ஆனந்த பாலக்கிட்னர், யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் நன்றியுரையை தினக்குரல் ஊடகவியலாளர் ருஷ்னா, ஏற்புரை -சலீம் புதல்வர் அகீல் சலீம் ஆகியோர்கள் இங்கு உரைநிகழ்தினார்கள் பி.ப.04.45- 07.45 மணி வரை சலிம் பற்றிய நினைவுகள் இடம் பெற்றது.
சலீம் குடும்ப உறுப்பினர்கள் ஊடகவியலாளர் தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்


































