(  வி.ரி. சகாதேவராஜா)

வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயம் வருடாந்த திருக்குளிர்ச்சிச்  சடங்கு காலம் புனித வாரமாகும். அக் காலப்பகுதியில் பொதுமக்கள் அனைவரும் பயபக்தியுடன் ஆசாரமாக நடந்து கொள்ள வேண்டும் வேண்டும்  

என்று திருக்குளிர்த்தி  சடங்கு தொடர்பான ஆலோசனைக்  கூட்டத்தின் போது கருத்துரைக்கப்பட்டது .

குறித்த சடங்கு தொடர்பான ஆலோசனை கூட்டமும் திருக்குளிர்ச்சி விஞ்ஞாபன  வெளியீட்டு நிகழ்வும் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை(15) ஆலய கேட்போர் கூடத்தில் தர்மகர்த்தாக்களான இரா.குணசிங்கம், எஸ்.நமசிவாயம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

அங்கு துறை சார்ந்த அலுவலர்கள்,  தலைமைகள் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.

காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மனின் வருடாந்த திருக்குளிர்ச்சிச் சடங்கு  எதிர்வரும் திங்கட்கிழமை 25ஆம் திகதி கதவுதிறத்தல் கடல்தீர்த்தம் கொணரல் கல்யாணக்கால் நடல் நிகழ்வுகளுடன் ஆரம்பமாகி

தொடர்ந்து 07தினங்கள் சடங்கு இடம்பெற்று 02ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை திருக்குளிர்த்தி பாடலுடன் சடங்கு நிறைவுறும் எனவும் பொதுமக்களின் ஒத்துழைப்பும் வருகையும் அவசியம் எனவும்

ஆலய தர்மகர்த்தாக்களான இரா.குணசிங்கம், எஸ்.நமசிவாயம் குறிப்பிட்டார்கள்.

கூட்டத்தில் பாதுகாப்பு,குடிநீர் வசதி, சுகாதாரம், போக்குவரத்து, வீதி,  தொண்டர் நடைமுறை,  உள்ளிட்ட பல துறைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டன. 

ஊடகம் மற்றும் சடங்கு புனிதவார நடைமுறைகள் தொடர்பில் சிரேஸ்ட ஊடகவியலாளர் வி.ரி.சகாதேவராஜா கருத்துரைத்தார்.

துறைசார் அலுவலர்களும் கருத்துகளை தெரிவித்தனர்.

இறுதியில் அனைவருக்கும் திருக்குளிர்ச்சி விஞ்ஞாபன அழைப்பிதழ் (நோட்டீஸ்) வழங்கி வைக்கப்பட்டது.