பாறுக் ஷிஹான்
தமிழின் அழிப்பின் அடையாளமான முள்ளிவாய்க்கால் கோர சம்பவ நினைவாக முன்னெடுக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் முன்னிட்டு திருக்கோவில் பிரதேச சபை இலங்கை தமிழரசி கட்சி மற்றும் சுயேட்சைக்குழு ஏற்பாட்டில் திருக்கோவில் வெட்டுகுளத்து பிள்ளையார் கோவில் முன்பாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு சுடரேற்றி அஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றது.
சனிக்கிழமை (16) மாலை முள்ளிவாய்க்கால் கஞ்சி இங்கு வழங்கி வைக்கப்பட்டதுடன் திருக்கோவில் பிரதேச சபை இலங்கை தமிழரசி கட்சி மற்றும் சுயேட்சைக்குழு உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.








