சற்று முன் ஆளுநர் மாளிகை நோக்கி புறப்பட்ட தவெகவின் தலைவர் விஜய் திரும்பிச் சென்றுள்ளதாக தெரியவருகிறது. 

ஆளுநர் சந்திப்பிற்கான நேரத்தை வழங்கவில்லை எனவும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் 118 என்பதை தாண்டி 120 இடங்களை பெற்றுள்ள தவெக மற்றும் ஆளுநர் சந்திப்பில் தற்போது சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. 

மேலும் இரவு ஏழு மணியளவில் ஆளுநர் கேரளம் செல்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள முக்கிய முன்னேற்றமாக, நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்திற்கு (த.வெ.க.) இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கட்சியும் ஆதரவு வழங்கியுள்ளது.
முன்னதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி (VCK) த.வெ.க.வுக்கு ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், தற்போது IUML கட்சியும் அதே பாதையை பின்பற்றி தனது ஆதரவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
2026 தமிழக சட்டசபை தேர்தலில் த.வெ.க. 108 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. பின்னர் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளின் ஆதரவு கிடைத்தாலும், ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை எண்ணிக்கையை எட்ட முடியாத நிலை காணப்பட்டது.
இந்த நிலையில், வி.சி.க. மற்றும் IUML ஆகிய கட்சிகளின் ஆதரவு கிடைத்ததன் மூலம் த.வெ.க. கூட்டணியின் பலம் 120 எம்.எல்.ஏ.க்களாக உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் விஜய் தலைமையிலான அரசு அமைவது உறுதியாகியுள்ளது என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து விஜய் விரைவில் தமிழக ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைப்பதற்கான உரிமையை கோர உள்ளதாகவும், ஆளுநரின் அழைப்பை தொடர்ந்து முதல்வராக பதவியேற்கும் வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.