கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் இடம்பெற்ற சேக்ஸ்பியர் தினம்

செல்லையா பேரின்பராசா 

கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ஆங்கில நெறியினர் நடத்திய சேக்ஸ்பியர் தினம் 22.04.2026 புதன்கிழமை காலை 08.30 மணியவில் கலாசாலை ரதிலட்சுமி மண்டபத்தில் அதிபர் ச.லலீசன் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரி ஆங்கில ஆசிரியர் சிவசக்தி ஜெயராஜா கலந்து கொண்டார். கலாசாலை விரிவுரையாளர்களான வசந்தி வைத்திலிங்கம் சுஜீவா அருள்லிங்கம் ஆகியோர் சேக்ஸ்பியர் படைப்புகள் குறித்த கருத்துரைகளை வழங்கினர். ஆங்கில நெறி ஆசிரிய மாணவர் வழங்கிய சேக்ஸ்பயிர் நாடகக் காட்சிகளும் இடம்பெற்றன. நிகழ்வுகளை ஆங்கில நெறி ஆசிரிய மாணவர்களான கௌசிகா நிரோஜன் தனுசாயினி கவிராஜ் ஆகியோர் முன்னிலைப்படுத்தினர்.