மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் ஆணின் சடலம் மீட்பு. கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம்

மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுவாஞ்சிகுடி கெல்பேஜ் வீட்டுத் திட்ட வீதியிலுள்ள தோட்டமொன்றில், ஆண் ஒருவரின் சடலம் இன்று (19) கண்டெடுக்கப்பட்டுள்ளது.

​சடலமாகக் கண்டெடுக்கப்பட்டவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் சந்தேகிக்கப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள களுவாஞ்சிகுடி பொலிஸார், சடலத்தை மீட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

​இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மரணத்திற்கான உண்மையான காரணம் மற்றும் பின்னணி தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.