தமிழ் இளைஞர் சேனையின் ஏற்பாட்டில் கல்முனை பிராந்திய கடற்கரை சூழலில் சிரமதானம்

கிளின் சிறிலங்கா திட்டத்திற்கு அமைய கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனையின் ஏற்பாட்டில் கல்முனை தொடக்கம் பெரியநீலாவணை வரை கடற்கரை சூழலை சுத்தம் செய்யும் சிரமதானப்பணி 11.04.2026 இன்று நடைபெற்றது.


இப்பணிக்கு தமிழ் இளைஞர் சேனையுடன் இணைந்து கல்முனை மாநாகர சபை ,கல்முனை வடக்கு பிரதேச செயலகம், கல்முனை கடற்படை, இராணுத்தினர் ,பொலிஸ் நிலையம் மாதர் சங்கங்கள் ,விளையாட்டுக்கழகங்கள் என்பன ஒத்துழைப்பு வழங்கி இருந்தனர்.
இதில் பங்குபற்றிய அனைவருக்கும் இளைஞர் சேனையினர் நன்றி தெரிவித்தனர்.