வெளியாகிய G.C.E.A/L 2025 (2026) பரீட்சை பெறுபெறுகளின் அடிப்படையில் கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலையின் அபிவிருத்தி நிறைவேற்று குழுவினரின் ஏற்பாட்டில் அதிபர் அருட். சகோ. ச. இ. றெஜினோல்ட் FSC அவர்களின் தலைமையில் (07.04.2026) காலை ஒன்றுகூடலில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட் மாணவர்களை மாணவத்தலைவர்கள் மாலை அணிவித்து வரவேற்றதுடன் அதிபர்,பிரதி அதிபர்கள், உப அதிபர்கள், பகுதித்தலைவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்ததோடு மாணவர்கள் அவர்களின் அனுபவப் பகிர்வினை கல்லூரியில் கல்வி கற்கும் மாணவர்களுடன் பகிர்ந்துகொண்டனர்.
குறிப்பாக கல்லூரி வரலாற்றிலேயே உயர்தர பிரிவில் அதிகூடிய மாணவர்களை கடந்த வருடம் 2024 ஜுபிலி ஆண்டில் 130 மாணவர்கள் பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்டு இருந்தனர். இது இவ்வாண்டில் 143 ஆக அதிகரித்துள்ளது. மற்றும் இவ் வருடம் மாவட்ட ரீதியில் பௌதீக விஞ்ஞான துறையிலும், பொறியியல் தொழிநுட்பத் துறையிலும் முதலிடங்களை பெற்றுள்ளது. மற்றும் வரலாற்றில் முதன்முறையாக 18 மாணவர்கள் 3A சித்தியை பெற்றதும் இதுவே ஆகும்.
குறித்த மாணவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக நின்று உழைத்த ஆசிரியர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவிப்பதோடு ஆசிரியர்களோடு இணைந்து செயற்பட்ட பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர்கள், உப அதிபர்கள், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், கல்வி சாரா உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் மற்றும் பழைய மாணவ சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் பாடசாலைச் சமூகம் சார்பாக பாடசாலை அபிவிருத்திக்குழு செயலாளர் சிறிரங்கன் நன்றிகளை தெரிவித்தார்.


























