செ.பேரின்பராசா

அண்மையில்  காலமான கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் கலாபூஷணம் ஏ.எல்.எம். சலீம் அவர்களின் நினைவு தினம் 04.04.2026 சனிக்கிழமை மாலை மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு ஊடக மையமும், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்து நடாத்திய  இந் நிகழ்வுக்கு சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஓய்வுநிலை அதிபருமான செல்லையா பேரின்பராஜா  தலைமை வகித்தார்.

முன்னதாக மூத்த ஊடகவியலாளர் கலாபூஷணம் ஏ.எல்.எம்.சலீமின் படத்திற்கு முன்னால் அகல்விளக்கேற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நினைவஞ்சலி நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கோ.கருணாகரன் (ஜனா) பா.அரியநேத்திரன் மட்டக்களப்பு மாநகர மேயர் சிவம் பாக்கியநாதன் இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் இரா துரைரத்தினம்  சிரேஸ்ட ஊடவியலாளர் எம்.எஸ்.நூர்தீன் அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத் தலைவர் எஸ்.லோகநாதன் ஓய்வு பெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர் அ.சுகுமாரன்  அன்னாரின் புதல்வர் அக்கீல் ஆகியோர் நினைவஞ்சலி உரை நிகழ்த்தினர். சிரேஸ்ட ஊடகவியலாளர் எஸ்.நிலாந்தன் தொகுப்புரையினையும் நன்றியுரையினையும் வழங்கினார்.

இந் நிகழ்வில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத் தலைவர் வா.கிருஸ்ணகுமார்  கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத் தலைவர் இ.தேவஅதிரன் உட்பட ஊடகவியலாளர்கள் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.