கல்முனை சேனையூர் கிட்டங்கி வாவிக்கரையில் அருளாட்சி புரியும் அருள்மிகு ஸ்ரீ கிட்டங்கிப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம் 05ஆம் திகதி சனிக்கிழமை வெகுவிமரிசையாக ஆரம்பமாகியுள்ளது.

தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறவுள்ள இவ்வுற்சவம், செப்டெம்பர் 14ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறும் தீர்த்தோற்சவத்துடன் நிறைவுபெறவுள்ளது.

உற்சவ காலப்பகுதியில் தினமும் மாலை 5.00 மணிக்கு புண்ணியாகவாசம், விசேட அபிஷேகம், ஹோமம் உள்ளிட்ட கிரியைகள் இடம்பெறுவதுடன், மாலை 7.30 மணிக்கு வசந்த மண்டப பூஜையைத் தொடர்ந்து சுவாமி உள்வீதி மற்றும் வெளிவீதி வலம் வரும் நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.

இதேவேளை, செப்டெம்பர் 13ஆம் திகதி விசேட கிரியைகள் இடம்பெறவுள்ளதுடன், செப்டெம்பர் 14ஆம் திகதி காலை முதல் புண்ணியாகவாசம், ஹோமம், பூர்ணாஹூதி மற்றும் தீர்த்த உற்சவம் உள்ளிட்ட முக்கிய கிரியைகள் நடைபெறவுள்ளன.

இந்நிலையில், உற்சவத்தின் அனைத்து நிகழ்வுகளிலும் பக்தர்கள் கலந்து கொண்டு கிட்டங்கிப் பிள்ளையார் பெருமானின் திருவருளைப் பெற்றுக்கொள்ளுமாறு ஆலய அறங்காவலர் சபையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

அனைவரும் வருக!
கிட்டங்கிப் பிள்ளையார் பெருமானின் திருவருள் பெறுக!