வேலோடுமலையில் பாலமுருகனின் வேல் பிரதிஷ்டை 

( வி.ரி.சகாதேவராஜா)

 மட்டக்களப்பு சித்தாண்டி வேலோடுமலை முருகன் ஆலயத்தில் பிரபல நாதஸ்வர சக்கரவர்த்தி ஈழ நல்லூர் பாலமுருகனால் புதிய வேல் அன்பளிப்பு செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இந்த நிகழ்வு சித்தர்களின் குரல் ஆஸ்தான தலைவர் சிவசங்கர் ஜீ ஏற்பாட்டில் நடைபெற்றது.

 வேலோடுமலை தேவஸ்தான ஆதீனகர்த்தா தியாகராஜ சுவாமிகள் முன்னிலையில் மகேஸ்வரன் சுவாமிகள் சகிதம் விசேட பூஜையின் பின்னர் ஊர்வலமாக கொணர்ந்து மூலஸ்தானத்திற்கு பின்னால் 18 சித்தர்களுக்கு முன்னால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இந்த வேல் அன்பளிப்பு நிகழ்வு 210 சித்தர்களை வரவழைக்கும் வேலோடுமலை வேள்வி யாகத்தின் ஒரு பகுதியாக நடைபெற்றது.

 நாதஸ்வர வித்துவான் பாலமுருகன் குழுவினரின் நாதஸ்வரக் கச்சேரியும் நடுநிசியில் நடைபெற்றது.

சித்தர்களின் குரல் அன்பர்களும் பக்தர்களும் கலந்து கொண்டார்கள்.

கௌரவிப்பு நிகழ்வும் நடைபெற்றது