செந்தூரன் ஏ.ஆர்.திருச்செந்துரன் என்பவரது முகநூல் பதிவு
சந்திரிகா என்ன தன் சொந்த காசிலிருந்து 250 மில்லியன் தூக்கி கொடுத்தாரா?? போன்ற பதிவுகள் சுற்றிக்கொண்டிருக்கின்றன..
இந்தப் பதிவு யுத்த விதிமுறைகளுக்கு மாறாக அப்பாவி மக்களையும் கொன்ற ஒரு ஜனாதிபதியை புனிதப்படுத்துவதற்காக அல்ல. ஆனால் இந்த அனர்த்த நிவாரணத்துக்காக பண்டாரநாயக்க நிதியத்தின் மூலமாக வழங்கப்பட்ட நிதியைப்பற்றிய சரியான புரிதலை ஏற்படுத்துவதற்காக…
1. இலங்கையின் புகழ்பெற்ற BMICH இன் மொத்த வருமானமும் பண்டாரநாயக்க நிதியத்திற்கு தான் செல்கின்றது. இலங்கை மக்களின் பணம் அல்ல இது – இது ஒரு நிறுவனத்தின் ஆண்டாண்டு கால இலாபமீட்டப்பட்ட பணம்.
2. BMICH பண்டாரநாயக்க குடும்ப நிறுவனமா? அவர்களா அதைக் கட்டினார்கள்? இல்லை. சீன அரசால் இலங்கைக்கு வழங்கப்பட்ட பரிசு. ஆனால்… நிறுவன தலைமையும் நிர்வாகமும் பண்டாரநாயக்க குடும்பத்தின் வசம் தான் இருக்கும். எப்படி இலாபமீட்டும் வகையில் இதை நடத்தலாம்? பணத்தை எப்படிப் பயன்படுத்தலாம்? என்பதை பண்டாரநாயக்க குடும்ப மூத்த வாரிசு (இப்போது சந்திரிகா ) தான் தீர்மானிப்பார்கள்.
3. எப்படிப் பார்த்தாலும் இது அரச நிறுவனம் தானே? மக்கள் பணம் தானே? ஆம் பாராளுமன்றத்தில் 1975ம் ஆண்டு 2ம் இலக்க சட்டப்படி உருவாக்கப்பட்ட அரச நிறுவனம் ஆனால் கட்டுமானத்துக்கோ, நாளாந்த தொழிற்படு செலவினங்களுக்கோ இலங்கை மக்களின் வரிப்பணம் பயன்படுத்தப்படவில்லை. மாறாக பண்டாரநாயக்க குடும்ப நிர்வாகம் மூலம் இலாபகரமாக இயங்கும் ஒரு நிறுவனம். இலங்கையில் எத்தனை அரச நிறுவனங்கள் இலாபமாக இயங்குகின்றன என சொல்லித்தெரிய வேண்டியதில்லை. திறைசேரியை நம்பியிருக்காத ஒரு நிறுவனம்.
4. முக்கியமாக ‘250 மில்லியன் பணம் இந்த நிதியத்திலிருந்து வழங்கப்பட வேண்டும்’ என்ற முடிவை எடுத்தது சந்திரிகா தான். நாடு எக்கேடும் கெடட்டும் என்றிருக்கவில்லை. அதற்காக அவரை பாராட்டுவதில் தப்பு இருப்பதாக தெரியவில்லை.
