பேரிடர் சூழ்நிலை காரணமாக மூடப்பட்ட பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பான சுற்றறிக்கை இன்று(09) வெளியிடப்படவுள்ளது.
அதன்படி, மாகாண மட்டத்தில் பாடசாலைகளை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவா தெரிவித்தார்.
தற்போதைய சூழ்நிலை காரணமாக, மூடப்பட்ட பாடசாலைகள் மீண்டும் திறப்பது இந்த மாதம் 16 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், க.பொ.த உயர்தரப் பரீட்சையின் மீதமுள்ள அனைத்து பாடங்களும் ஜனவரி மாதம் நடத்தப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக லியனகே கூறியுள்ளார்.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்கள் குறித்து இன்னும் சரியான தகவல்கள் கிடைக்கவில்லை என்றும், அவர்களை பரீட்சை மையங்களுக்கு அழைத்துச்செல்ல அவர்களின் தகவல்கள் தேவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
