கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் விபத்தில் மரணம்

(வி.ரி.சகாதேவராஜா)
மட்டக்களப்பு – வந்தாறுமூலைப் பிரதேசத்தில் ( 24.11.2025 மாலை) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் கிழக்குப் பல்கலைக்கழத்தின் மருத்துவபீட மாணவன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

ஒரு குழந்தையின் தந்தையான 23 வயதுடைய எம்.மசூத் மீராவோடை பிரதேசத்தை பிறப்பிடமாகவும் ஓட்டமாவடி பிரதேசத்தை வசிப்பிடமாகவும் கொண்டவர்
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு – பிள்ளையாரடி பிரதேசத்திலுள்ள மருத்துவ பீடத்தில் இருந்து ஓட்டமாவடிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது எதிரே வந்த உழவு இயந்திரம் திடீரென வலதுபுறத்து உள்வீதிக்கு மாறிய வேளை மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியுள்ளது.
உழவு இயந்திரத்திற்கும் இழுவைப் பெட்டிக்குமிடையில் மோட்டார் சைக்கிள் சிக்கியுள்ளது. இதன்போது தலைக்கவசம் சுக்குநூறாகியதையடுத்து தலையில் பாரிய காயம் ஏற்பட்டு இரத்தப் பெருக்கினால் இவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். உழவு இயந்திரத்தின் வாரதி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு ள்ளார்.
உழவு இயந்திரம் மற்றும் மோட்டார் சைக்கிளும் பொலி ஸாரினால் தடுத்து வைக்கப்பட்டள்ளன.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணையதிகாரி எம்எஸ் எம். நசிர் சம்பவ இடத்தைப் பார்வையிட்ட பின்னர் விசாரணை மேற்கொண்டார்.
ஜனாஸா மாவடிவேம்பு வைத்தியசாலையிலிருந்து பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.