ஓந்தாச்சிமடம் ஆயுர் வேத மருந்தகத்திற்கு வைத்திய அதிகாரியாக திருமதி புவிதா சதீஸ் நியமனம் பெற்றுள்ளார்.
துறைநீலாவணைக் கிராமத்தினைச் சேர்ந்த திருமதி புவிதா சதீஸ் அவர்கள் கடந்த 2019 காலப்பகுதியில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பீடத்தில் தனது சித்த மருத்துவ பட்டத்தினை பூர்த்தி செய்திருந்த நிலையில் இவருக்கான பதவி நியமனக் கடிதம் கடந்த வாரம் கொழும்பில் சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸவினால் கையளிக்கப்பட்டது.
இவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஓந்தாச்சிமடம் ஆயுர் வேத மருந்தகத்திற்கு வைத்திய அதிகாரியாக நியமிக்கப்பட்டு அண்மையில் தனது கடமையினைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
