நாடுகடந்தும் வைரலாகிவரும் கல்முனை KFM டிலோஜனின் save the date (pre wedding photoshoot) வீடியோ

கல்முனை KFM நிறுவனத்தின் உரிமையாளரும் சிறந்த கலைஞருமான டிலோஜன் பல்வேறு கலைப்படைப்புக்களை உருவாக்கி பல விருதுகளை பெற்ற ஒரு ஆக்கத்திறன்மிக்க படைப்பாளி.

இவரது திருமணம் எதிர்வரும் 03.11.2025 திகதி நடைபெறவுள்ளது. சிறந்த ஒளிப்பதிவாளரான இவர் தனது திருமண நிகழ்வின் save the date pre wedding photoshoot ஒளிப்பதிவை தனது சிறந்த கற்பனை அறிவைப்பயன்படுத்தி தயாரித்த காணொளி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

குறித்த காணொளி உருவாக்கப்பட்ட விதம், ஒளிப்பதிவு இசை எடிட்டிங் டிலோஜனின் நடனம் , பங்குபற்றியவர்களின் நடிப்பு அனைத்தும் தென்னிந்திய தரைப்பட தரத்தில் உள்ளது. குறித்த காணொளி இலங்கையில் மட்டுமல்ல நாடு கடந்தும் பலரின் வரவேற்பை பெற்று சமூக ஊடகஙகளில் பகிரப்பட்டு வருகின்றது.

தனது KFM நிறுவனத்தின் மூலம் திருமண நிகழ்வுகள், ஏனைய நிகழ்வுகளை படப்பிடிப்பு , ஒளிப்பதிவு செய்வதில் பெரும் நன்மதிப்பை பெற்றுள்ள டிலோஜன் பல குறும்படங்களையும் ,தென்னிந்திய தரத்திற்கு பல பாடல்களையும் உருவாக்கிய ஒரு படைப்பாளி ஆவார்

எதிர்வரும் 03.11.2025 அன்று திருமண பந்தத்தில் இணையவுள்ள டிலோஜனுக்கும் அவரது வருங்கால மனைவிக்கும் கல்முனை நெற் ஊடக வலையமைப்பின் முற்கூட்டிய திருமண வாழ்த்துக்கள்

வீடியோ இந்த இணைப்பில்

https://www.facebook.com/reel/1203163871629799