• பாகிஸ்தானை மட்டும் இந்திய அணி 3 தடவை வீழ்த்தி முத்திரை பதித்தது.
  • இந்திய அணிக்கு 9-வது முறையாக ஆசிய கோப்பை கிடைத்தது.

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி செம்பியன் பட்டம் வென்றுள்ளது. 

இதற்கமைய ஆசியக் கிண்ணத்தை வென்ற இந்திய அணிக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

அத்துடன் “விளையாட்டு களத்திலும் ஒபரேஷன் சிந்தூர்” நடைபெற்றுள்ளதாகவும் இதிலும் இந்தியாவுக்கே வெற்றி கிடைத்துள்ளதாகவும் அவர் தனது உத்தியோகபுர்வ எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 19.1 ஓவரில் 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து விளையாடிய இந்திய அணி 19.4 ஓவரில் 150 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.