சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகம் நாடு முழுவதும் ஒரு சிறந்த திட்டத்தை முன்னெடுக்கிறது
நாட்டில் “சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்களை” நிறுவுவதற்கான திட்டம் இந்த மாதம் 26 ஆம் தேதி ஆரம்பிக்கபடும்.
ஐந்து மாவட்டங்களில் ஐந்து சுகாதார மற்றும் நல்வாழ்வு மையங்கள் பொதுமக்களின் பாவனைக்காக வழங்கப்படும்.
சிறந்த கண்ணியத்துடன் கூடிய சுகாதார சேவையின் உச்ச பலனை நாம் இலகுவாக பெற்றுக்கொள்வதை உறுதி செய்வதற்காக, சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ், புதிய அரசாங்கத்தின் சுகாதாரக் கொள்கையின் முதல் கட்டமாக நாடு முழுவதும் ஆயிரம் ஆரம்ப சுகாதார மையங்களை நிறுவ சுகாதார மற்றும் ஊடக அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
புதிய அரசாங்கத்தின் சிறந்த திட்டமான “HEALTHY SRI LANKA” இன் கீழ் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு நூறு ஆரம்ப சுகாதார மையங்கள் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. மக்களுக்கு எளிதில் அணுகக்கூடிய இடத்திலும் நிறுவப்படும் இந்த ஆரம்ப சுகாதார மையங்கள், ஆரோக்கியத்திற்கான மையங்கள் என்று விசேடமாக அடையாளப்படுததபடஉள்ளன. அதன்படி காலி, இரத்தினபுரி, களுத்துறை, கண்டி மற்றும் மாத்தளை ஆகிய ஐந்து மாவட்டங்களை உள்ளடக்கிய ஐந்து சுகாதார மற்றும் நல்வாழ்வு மையங்கள் இந்த மாதம் 26, 27, 29 மற்றும் அக்டோபர் 02 ஆகிய தேதிகளில் பொதுமக்களின் பாவனைக்காக வழங்கப்படஉள்ளன.
சுகாதார மற்றும் நல்வாழ்வு மையத் திட்டத்தின் முதல் மையமான காலி மாவட்டத்தில் உள்ள மாபலகம சுகாதார மற்றும் நல்வாழ்வு மையம் செப்டம்பர் 26 ஆம் தேதி பொதுமக்களுக்குத் திறக்கப்பட உள்ளது, மேலும் இது மாபலகம, தல்கஸ்வல, கோனலகொட மற்றும் கோனலகொட கிழக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் வசிக்கும் கிட்டத்தட்ட ஐயாயிரம் மக்களுக்கு சுகாதார சேவைகளை வழங்கும். இரண்டாவது சுகாதார மற்றும் நல்வாழ்வு மையமான அத் ஓயா சுகாதார மற்றும் நல்வாழ்வு மையம் செப்டம்பர் 27 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. இது முத்துவ, அதோயா, முத்துவ கிழக்கு மற்றும் பஹல ஹகமுவ ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் உள்ள கிட்டத்தட்ட ஐயாயிரம் மக்களுக்கு சேவைகளை வழங்கும்.
செப்டம்பர் 29 ஆம் தேதி, களுத்துறை மாவட்டத்தில் தல்பிட்டிய வடக்கு, தெற்கு மற்றும் நாரம்பிட்டிய கிராம அலுவலர் பிரிவுகளில் உள்ள கிட்டத்தட்ட பத்தாயிரம் மக்களுக்கு சுகாதார சேவையை வழங்குவதற்காக நிறுவப்பட்ட தல்பிட்டிய சுகாதார மற்றும் நல்வாழ்வு மையம், மூன்றாவது மையமாகத் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அக்டோபர் 2 ஆம் தேதி, கண்டி மாவட்டத்தில் உள்ள பொல்கொல்லவத்தை சுகாதார மற்றும் நல்வாழ்வு மையம் நான்காவது மையமாகத் திறக்கப்படும், அதே சமயம் வடகசகம தெற்கு, வடகசகம வடக்கு, குன்னேபன மற்றும் உட குன்னேபன வடக்கு ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் கிட்டத்தட்ட ஏழாயிரம் மக்களை உள்ளடக்கும் வகையில் இந்த மையம் நிறுவப்பட்டுள்ளது. அதே நாளில் (அக்டோபர் 02), மாத்தளை மாவட்டத்தில் உள்ள டன்கந்த, யசலுகஸ்தென்ன மற்றும் தம்பகொல்ல 1 ஆகிய மூன்று கிராம சேவைப் பிரிவுகளில் வசிக்கும் கிட்டத்தட்ட ஐந்தாயிரம் மக்களை உள்ளடக்கிய ஐந்தாவது சுகாதார மற்றும் நல்வாழ்வு மையமாக டன்கந்த சுகாதார மற்றும் நல்வாழ்வு மையம் பொதுமக்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நாட்டின் கிராமப்புற மக்களுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கும் மையமாக இல்லாத சுகாதார மற்றும் நல்வாழ்வு மையம், மக்களின் ஆரோக்கியத்திற்குப் பொறுப்பான பல்வேறு ஆரம்ப சுகாதார சேவைகளை வழங்கும். இதன் கீழ், தொற்று அல்லாத நோய்களுக்கான சிகிச்சை மற்றும் ஆலோசனை சேவைகள், அடிப்படை அறுவை சிகிச்சை, முதியோர் பராமரிப்பு, மறுவாழ்வு, நோய்த்தடுப்பு பராமரிப்பு, அடிப்படை கண் பராமரிப்பு, வாய்சார்ந்த சுகாதார பராமரிப்பு, மனநல பராமரிப்பு மற்றும் ஆலோசனை சேவைகள், ஊட்டச்சத்து பராமரிப்பு மற்றும் மது மறுவாழ்வு சேவைகள், தேர்ந்தெடுக்கப்பட்ட ஆய்வக சோதனைகள் உள்ளிட்ட பல்வேறு ஆரம்ப சுகாதார பராமரிப்பு சேவைகள் செயல்படுத்தப்பட உள்ளன.
இந்த மையங்கள் ஒவ்வொன்றிலும் ஒரு குடும்ப மருத்துவர், ஒரு சமூக சுகாதார செவிலியர் மற்றும் ஒரு ஒருங்கிணைப்பு அதிகாரி உள்ளிட்ட ஒரு சுகாதார குழு இணைக்கப்பட உள்ளது.
இந்த மையங்கள் மூலம், அந்தப் பகுதிகளிலும், அந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே காணப்படும் சுகாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதே பிரதான நோக்கமாகும்.
குறிப்பாக, பொதுமக்களுக்கு சுகாதாரம் குறித்து விழிப்புணர்பு அளிப்பதும் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையின் கீழ், ஒவ்வொரு பகுதியிலும் அரசியல், சமூக மற்றும் அரசு அதிகாரிகளின் பங்கேற்புடன் மக்கள் பரம்பலை அடிப்டையாக கொண்டு ஐந்து சுகாதார மற்றும் நல்வாழ்வு மையங்களை பொதுமக்களுக்குத் வழங்க சுகாதார மற்றும் ஊடக அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.