இன்று மாவட்ட சாதனை மாணவன் கனீசை அழைத்து கௌரவித்த கல்முனை நெற் !

 வி.ரி. சகாதேவராஜா)

புலமைப் பரிசில் பரீட்சையில் அம்பாறை மாவட்டத்தில் அதிகூடிய 180 புள்ளிகளைக் பெற்ற சம்மாந்துறைவலய புதுநகர்  அ.த.க பாடசாலை மாணவன்  பிரகலதன் கனீஸ்ஸை, கல்முனை நெற் இணையத்தளத்தினர் கல்முனைக்கு அழைத்து நேர்காணல் செய்து பரிசு வழங்கி பாராட்டிக் கௌரவித்தனர்.

புதுநகர் பாடசாலையில் இம்முறை 8 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளனர். அவர்களில் அதிகூடிய 180 புள்ளிகளைப் பெற்ற பிரகலதன் கனீஸ், கல்முனைக்கு அழைக்கப்பட்டு கல்முனை நெற் பிரதான தலைமையகத்தில் இன்று (5) வெள்ளிக்கிழமை சூட்டோடு சூட்டாக பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார்.

கல்முனை நெற் இணையத்தளப் பணிப்பாளர் பு.கேதீஸ்ஸின்( கட்டார்)  ஏற்பாட்டில்,  ஆலோசகர் சிரேஸ்ட ஊடகவியலாளர் வி.ரி.சகாதேவராஜா வழிகாட்டலில்,  இயக்குனர் சபை உறுப்பினர்களான பி.புவிராஜ், கே.சாந்தகுமார், பி.சந்திரமோகன் ஆகியோர் கலந்து கொண்டு,  சாதனை மாணவனுக்கும் பாடசாலைக்கும் ஒரு தொகுதி நூல்களை பரிசாக  வழங்கி கௌரவித்தனர்.

இந்  நிகழ்வில்  அதிபர் ரி. ஜெயசிங்கம் ,கற்பித்த ஆசிரியை திருமதி இராமச்சந்திரன்,  மாணவனின் தாய் திருமதி வனிதா பிரகலதன்,பிரதி அதிபர் கே. கிருஷ்ணமோகன்  ஆகியோரும் அத்தருணத்தில் பங்கேற்றனர். அவர்களும் பாராட்டப்பட்டனர்.

கல்முனை நெற் அலுவலகம் திறப்பு விழா நிகழ்வின்போது அமரர் கவிஞர் முகில்வண்ணன் நினைவாக அவரது குடும்பத்தார் கல்முனை நெற்றுக்கு வழங்கிய புத்தகங்களில் இருந்து ஒரு தொகுதி அன்பளிப்பு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

………………………………………………………………..

(வி.ரி.சகாதேவராஜா)
சம்மாந்துறைவலயத்தின்  அதிகஸ்ர பிரதேச பாடசாலையான கமு/மல்வத்தை புதுநகர்  அ.த.க பாடசாலை மாணவன்  பிரகலதன் கனீஸ் வலயத்தின்  அதி கூடிய 180புள்ளிகளைப்பெற்று மகத்தான சாதனை படைத்துள்ளார்.

இதுவே அம்பாறை மாவட்டத்தின் அதிகூடிய புள்ளி சாதனை என்று குறிப்பிடுகிறது.

புதுநகர் பாடசாலையில் இம்முறை 8 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளனர். மேலும் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று  100%(வீதம்) ஏனைய மாணவர்களும் சித்தியடைந்துள்ளனர்.

மாவட்ட சாதனை மாணவன் பிரகலதன் கனீஸ்- 180
எஸ்.லிதுன்- 156
எஸ்.ஜிதுமிக்கா- 153
வை.கிருஸ்காந்- 149
வி.கரிஸ்சாகன்- 148
ஆர்.டிதேர்ஸா- 145
ஜேமதுக்சன்- 135
ரி.டோவர்சனன்- 132 ஆகியோர் சித்தி பெற்றிருப்பதாக அதிபர் ரி.ஜெயசிங்கம் தெரிவித்தார்.

மாவட்ட சாதனை மாணவன் பிரகலதன் கனீஸ் சந்திப்பு நிகழ்வில்  அதிபர் ஜெயசிங்கம் ,
கற்பித்த ஆசிரியை திருமதி இராமச்சந்திரன்,  மாணவனின் தாய் திருமதி வனிதா பிரகலதன்,பிரதி அதிபர் கிருஷ்ணமோகன்  ஆகியோரும் அத்தருணத்தில் பங்கேற்றனர்.

இவர்களை அதிபர்ஆசிரியர்கள் பாடசாலை சமூகம் சார்பாக வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.