பாண்டிருப்பு வள்ளலார் வல்லவர் உள்ளொளி நேசிப்பு மையத்தினால் 32 வது சிவலிங்கம் கரடியனாற்றில் பிரதிஸ்டை செய்யப்பட்டது.
கரடியனாறு நரசிம்ம வைரவர் ஆ லய. மஹா கும்பாபிசேகம் 01.09.2025 நேற்று முன்தினம் ஆரம்பமானது.
இதன் போது பாண்டிருப்பு வள்ளலார் வல்லவர் உள்ளொளி நேசிப்பு மையத்தால் வழங்கப்பட்ட சிவலிங்கம் பிரதிஸ்டை செய்யப்பட்டது.
இது பாண்டிருப்பு வள்ளலார் வல்லவர் உள்ளொளி நேசிப்பு மையத்தால் வழங்கப்பட்டு பிரதிஸ்டை செய்யப்பட்ட 32 வது சிவலிங்கமாகும்.
விரைவில் கதிரவெளி நாகலிங்கேஸ்வரர் ஆலயத்திலும் மற்றுமொரு சிவலிங்கம் பிரதிஸ்டை செய்யப்பட உள்ளது.
இது தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக வள்ளலார் வல்லவர் உள்ளொளி நேசிப்பு மையத்தின் பிரதானி வல்லவர் தவத்திரு புண்ணியமலர் அம்மா,ஆன்மீக இணைப்பாளர் சிவதிரு சௌவியதாசன்,சுவாமி கலியுகவரதன்,சிவதிரு கண வரதராஜன் ஆகியோர் அப்பிரதேசங்களுக்கு கள விஜயமொன்றையும் மேற்கொண்டிருந்தனர்.










