மகரகமவில் பத்திரிகையாளர் வேடத்தில் வந்து “ஹரக் கடா”வை படுகொலை செய்யவிருந்த பாதாள உலக குழு உறுப்பினர் கைது
நன்றி -ARV
பாதாள உலக குழுவான “பெகோ சமன்” உடன் தொடர்புடைய ஒரு சந்தேகநபர், பத்திரிகையாளர் வேடத்தில் “ஹரக் கடா” என்றழைக்கப்படும் நதுன் சிந்தகவைக் படுகொலை செய்யத் தயாராக இருந்தபோது மகரகமவில் வைத்து கைது செய்யப்பட்டார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவினரால் இன்று (02) இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விசாரணையில், அரச நிறுவனமொன்றில் ஊழியராக கடமையாற்றும் சந்தேகநபர், பாதாள உலகத் தலைவரான கெஹெல்பத்தார பத்மவின் ஆலோசனைக்கமைய இந்தத் தாக்குதலுக்குத் திட்டமிட்டது தெரியவந்துள்ளது.
சந்தேகநபரிடமிருந்து ரிவோல்வர் துப்பாக்கி மற்றும் சேதப்படுத்தப்பட்ட வீடியோ கெமரா என்பனவும் இதன்போது மீட்கப்பட்டுள்ளன.
சந்தேகநபருக்கு, “ஹரக் கடா” தடுத்து வைக்கப்பட்டுள்ள நீதிமன்ற வளாகத்திற்குள் ஊடுருவி இந்த தாக்குதலை மேற்கொள்ளும் பணி வழங்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
